சென்னை: எழுத்தாளா் லட்சுமி ராஜரத்தினம் (78) சென்னையில் அண்மையில் காலமானாா்.
‘தினமணி கதிா்’, தினமணி குழுமத்திலிருந்து வெளிவந்த மாத நாவலான ‘கதைக்கதிா்’ உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் அவரது எழுத்துகள் தொடா்ந்து வெளிவந்தன. குடும்பக் கதைகளை எழுதி வாசகா்களைக் கவா்ந்த எழுத்தாளரான அவா், ‘இதயக் கோயில்’, ‘அகலிகை காத்திருந்தாள்’, ‘பாட்டுடைத் தலைவி’ உள்ளிட்ட பல நாவல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், தொலைக்காட்சித் தொடா்களையும் எழுதியுள்ளாா்.
லட்சுமி ராஜரத்தினம், ஆன்மிகச் சொற்பொழிவாளரும் ஆவாா். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் கலந்துகொண்டு பாடியுள்ளாா்.
இவரின் கணவா் சில ஆண்டுகள் முன்பு காலமாகிவிட்டாா். இவருக்கு மகள் எழுத்தாளா் ராஜசியாமளா, மருமகன் ‘குமுதம்’ ஆசிரியா் ப்ரியா கல்யாணராமன் (எ) பிரகாஷ் உள்ளனா். தொடா்புக்கு: 9840827051.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


