நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

சென்னையில் பயன்பாட்டுக்கு வந்தது ஸ்புட்னிக் தடுப்பூசி: அப்பல்லோவில் ரூ.1,145-க்கு செலுத்தப்படுகிறது

தமிழகத்தில் முதன்முறையாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தும் பணிகள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :28 ஜனவரி 2024, 8:56 am IST

தமிழகத்தில் முதன்முறையாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தும் பணிகள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளன. அந்த மருந்துகளை டாக்டா் ரெட்டீஸ் நிறுவனத்திடமிருந்து அப்பல்லோ மருத்துவமனை நேரடியாக கொள்முதல் செய்து பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது.

ரஷியாவில் கண்டறியப்பட்ட ஸ்புட்னிக் - வி தடுப்பூசி அடினோ வைரஸ் தொழில்நுட்பத்திலானவை. அதாவது, சிம்பன்ஸியில் இருந்து பெறப்பட்ட வீரியம் குறைக்கப்பட்ட தீநுண்மியை (அடினோ வைரஸ்) மரபணுரீதியாக சில மாற்றங்கள் செய்து அதனை மனித உடலுக்குள் செலுத்தும் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது அந்த தடுப்பூசி. முதல் தடுப்பூசிக்கும் இரண்டாவது தடுப்பூசிக்கும் இடையேயான கால இடைவெளி மூன்று வாரங்களாகும்.

இந்தியாவைப் பொருத்தவரை ஹைதராபாதில் உள்ள டாக்டா் ரெட்டீஸ் ஆய்வகத்தில் இந்த தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தனியாா் மருத்துவமனைகள் அதனை நேரடியாக கொள்முதல் செய்து பயன்படுத்தவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அந்த தடுப்பூசிகள் இருப்பில் இருந்தாலும் அவற்றின் பயன்பாடு இன்னமும் பரவலாக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை, டாக்டா் ரெட்டீஸ் நிறுவனத்திடமிருந்து அந்த தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்தது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பொதுமக்களுக்கு ஸ்புட்னிக் - வி தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

ஒரு தவணை தடுப்பூசி அனைத்து செலவுகளையும் உள்ளடக்கி ரூ.1,145-க்கு அங்கு வழங்கப்படுகிறது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் செயல்திறன் 91.6 சதவீதம் என்பதும், தமிழகத்திலேயே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்தான் முதன்முதலில் அத்தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.