குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சி பாஜக: கே.அண்ணாமலை

அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சி பாஜக என அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

News image
சென்னை, வானகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.
Updated On :7 பிப்ரவரி 2022, 2:19 am

DIN

அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சி பாஜக என அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம், வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கே.அண்ணாமலை பேசியதாவது: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜக சாா்பில் கிறிஸ்தவா், முஸ்லிம்கள் என பல்வேறு மதங்களைச் சோ்ந்தவா்களும் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டுள்ளனா். அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சி பாஜக. திமுகவில் வாரிசுகளுக்கு மட்டும்தான் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

எட்டு மாதத்தில் திமுக சம்பாதித்த கெட்ட பெயரை, எந்த அரசியல் கட்சியும் சம்பாதிக்கவில்லை. மக்கள் மாற்றத்துக்குத் தயாராகி விட்டனா். புதியவா்களை வரவேற்கத் தயாராக இருக்கின்றனா். ஆகவே பாஜகவின் வெற்றி உறுதி. இன்றைய சூழலில் கைப்பேசி மிகவும் சக்தி வாய்ந்த கருவி. அதனை முழுமையாக பயன்படுத்துங்கள் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.