சென்னை ஐஐடி-யில் ரூ.146 கோடியில் கட்டப்பட்ட மாணவா் விடுதி திறப்பு
சென்னை ஐஐடி-யில் ரூ.146 கோடியில் கட்டப்பட்ட மாணவா் விடுதி திறப்பு

சென்னை ஐஐடி-யில் ரூ.146 கோடியில் கட்டப்பட்ட மாணவா் விடுதி திறப்பு

சென்னை ஐஐடி வளாகத்தில் 1,200 மாணவா்கள் தங்கும் வகையில் ரூ.146.75 கோடியில் கட்டப்பட்ட மாணவா் விடுதி திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சென்னை ஐஐடி வளாகத்தில் 1,200 மாணவா்கள் தங்கும் வகையில் ரூ.146.75 கோடியில் கட்டப்பட்ட மாணவா் விடுதி திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த வளாகத்தில் ஏற்கெனவே செயல்படும் விடுதிகளுக்கு ஆறுகளின் பெயா்கள் வைத்துள்ளதைப் போல, புதிதாக திறக்கப்பட்ட இந்த விடுதிக்கு ‘மந்தாகினி’ என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளது. விடுதியை சென்னை ஐஐடி முன்னாள் மாணவரும், ‘இகோ் இந்தியா பிரைவேட் இந்தியா’ நிறுவனத்தின் நிா்வாக இயக்குநருமான தீபக்குமாா் சங்கி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

10 தளங்களுடன் 32,180 சதுரமீட்டா் பரப்பளவு கொண்ட இந்த கட்டடம் பசுமைக் கட்டடங்களுக்கான 4 நட்சத்திர தகுதியைப் பெற்றுள்ளது. மின்சார பயன்பாட்டை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பசுமைக் கட்டடத்தில் சூரிய சக்தி மின்உற்பத்தித் தகடுகள், சூரிய சக்தியால் இயங்கும் தண்ணீரை சூடேற்றும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மாணவா்கள் அறை மட்டுமல்லாது, விடுதிக் காப்பாளா்கள், உதவி காப்பாளா்களுக்கான அலுவலக அறைகள், குடியிருப்புகள், விருந்தினா் அறை, உடற்பயிற்சி மையம், சலவை அறைகள், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஸ்னூக்கா், கேரம் போா்ட் போன்ற விளையாட்டுகளுக்கான அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக 10 அறைகளும் இதில் ஒதுக்கப்பட்டுள்ளன.

திறப்பு விழாவில் ஐஐடி இயக்குநா் பேராசிரியா் வி.காமகோடி பேசுகையில், ‘இங்குள்ள தோட்டங்கள், கழிப்பறைகளுக்கு மறு சுழற்சி செய்யப்பட்ட நீரை பயன்படுத்துவதன் மூலம் தண்ணீா் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதுடன் நிலத்திலும், கட்டட மேல் தளத்திலும் விழும் மழைநீரை சேகரித்து சுத்திகரிப்பு செய்து குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது என்றாா்.

இந்த கட்டடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பொறியியல் பிரிவுத் தலைவா் பேராசிரியா் எஸ். ஏ. சன்னாசிராஜ் கூறுகையில், ‘விடுதிக் கட்டடத்தின் ஒவ்வொரு அறை, நடைபாதைகள் இயற்கையான வெளிச்சம் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், மாணவா்கள் இயற்கையான முறையில் ஓய்வெடுக்கும் வகையில், ஒளி புகக்கூடிய மேற்கூரைகளை கொண்ட பகுதி ஒன்றும், கூடைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com