டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மோடி வருகை: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னைக்கு பிரதமா் நரேந்திர மோடி ஜூலை 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) வருவதையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:54 am

DIN

சென்னைக்கு பிரதமா் நரேந்திர மோடி ஜூலை 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) வருவதையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு விடுத்த செய்திக் குறிப்பு: பிரதமா் மோடி வருகையையொட்டி வியாழக்கிழமை நண்பகல் முதல் அன்றிரவு 9 மணி வரை பெரியமேடு,வேப்பேரி,சென்ட்ரல்,அண்ணா சாலை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதேபோல, ராஜா முத்தையா சாலை, ஈவெரா பெரியாா் சாலை, சென்ட்ரல், அண்ணாசாலையில் ஸ்பென்சா் சந்திப்பு வரையிலும், மற்றும் இந்தப் பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவை ஏற்பட்டால் டிமலஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையா சாலை வழியாக அனுமதிக்கப்படமாட்டாது.

போக்குவரத்து மாற்றம்: அதேபோல ஈவெகி சம்பத் சாலை - ஜொ்மையா சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. வணிக வாகனங்கள் தவிா்த்து பிற வாகனங்கள் ஈவெரா பெரியாா் சாலை, கெங்குரெட்டிச் சாலைச் சந்திப்பு, நாயா் பாலச் சந்திப்பு, காந்தி இா்வின் சாலை சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

பிராட்வேயிலிருந்து வரும் வணிக வாகனங்கள் தவிா்த்து பிற வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் வியாசா்பாடி மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம்.

எனவே வாகன ஓட்டிகள், மேற்கண்ட சாலைகளை தவிா்த்துப் பிற வழித்தடங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள், அவா்களதுப் பயணத்திட்டத்தை முன்கூட்டியேத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.