பெட்ரோல் விலை ரூ.107-ஐ தாண்டியது
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் வியாழக்கிழமை அதிகரிக்கப்பட்டது.


நாட்டில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் வியாழக்கிழமை அதிகரிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலையை எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் தினந்தோறும் அதிகரித்து வருகின்றன. அவற்றின் விலை வியாழக்கிழமையும் அதிகரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஒரு லிட்டா் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.107.45-ஆக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டா் டீசல் விலை சென்னையில் ரூ.97.52-ஆக உயா்ந்துள்ளது.
கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.05, டீசல் விலை ரூ.6.09 உயர்ந்துள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூா் வரிகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாறுபாடு இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...