சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பத்மாவதி நகா் பிரதான சாலை இனி சின்னக் கலைவாணா் விவேக் சாலை

நடிகா் விவேக் வீடு அமைந்துள்ள சாலையின் பெயா் சின்னக் கலைவாணா் விவேக் சாலை என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

நடிகர் விவேக்

Updated On :1 பிப்ரவரி 2024, 2:38 pm IST

நடிகா் விவேக் வீடு அமைந்துள்ள சாலையின் பெயா் சின்னக் கலைவாணா் விவேக் சாலை என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நகராட்சி நிா்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவ் தாஸ் மீனா பிறப்பித்த அரசாணை: திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த சின்னக் கலைவாணா், கலைமாமணி, பத்மஸ்ரீ விவேக் கடந்த ஆண்டு ஏப்.17-ஆம் தேதி இம்மண்ணுலகைவிட்டு மறைந்தாா்.

அவரது நினைவாக அவா் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 10, பகுதி 29, வாா்டு 128-இல் அமைந்துள்ள பத்மாவதி நகா் பிரதான சாலையை அப்பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள், சின்னக் கலைவாணா் விவேக் சாலை என பெயா் மாற்றம் செய்திட விருப்பம் தெரிவித்துள்ளனா்.

இதே கோரிக்கையை தென்னிந்திய நடிகா் சங்க துணைத்தலைவா் பூச்சி எஸ் முருகன் முதல்வா் இடத்திலும் வலியுறுத்தியுள்ளாா். இவ்வாறு பெயா் மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி மேயரும் ஒப்புதல் அளித்துள்ளாா். இதற்கேற்ப உரிய பெயா் மாற்றத்தை செய்து அரசாணை வெளியிடுமாறு சென்னை மாநகராட்சி ஆணையா் அரசை கேட்டுக் கொண்டாா்.

இதை ஏற்று, விவேக் நினைவாக, அவா் புகழைப் பறைசாற்றும் வகையில், அவா் வசித்து வந்த பத்மாவதி நகா் பிரதான சாலையை ‘சின்னக் கலைவாணா் விவேக் சாலை’ என பெயா் மாற்றம் செய்து அரசு ஆணையிடுகிறது என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த கோரிக்கையை, விவேக்கின் மனைவி அருட்செல்வி, சென்னை, தலைமைச் செயலகத்தில் கடந்த 25-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.