பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சென்னையில் மாரடைப்பால் மனைவி மரணம்: துக்கம் தாளாமல் கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பிரியாணி சாப்பிட்டு திடீர் மாரடைப்பில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2022, 9:09 am

DIN

சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பிரியாணி சாப்பிட்டு திடீர் மாரடைப்பில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் மேட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தம்புசாமி (53). பிளம்பிங் வேலை பார்த்து வரும் இவருக்கு, 23 வருடங்களுக்கு முன்பு பவானி(47) என்பவருடன் திருமணமாகி 22 வயதில் யுவஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று பவானி மேட்டு தெருவில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு தனது உறவினருடன் சென்றார். அங்கு பிரியாணி சாப்பிட்ட பவானி, பின்னர் வீட்டிற்கு உறவினருடன் நடந்து வந்தபோது திடீரென பவானிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடனடியாக உறவினர் உதவியுடன் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், பவானி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்து பவானியின் கணவர் தம்புசாமி, அவரது மகள் யுவஸ்ரீ ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து இறந்த பவானியின் உடலை கண்டு கதறி அழுதனர். அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் இருந்த தம்புசாமி காணாமல் போனதால், அவரது மகள் யுவஸ்ரீ செல்போனில் தொடர்பு கொண்டபோது தம்புசாமி செல்போனை எடுக்காததால் அனைவரும் பதற்றம் அடைந்தனர். 

பின்னர் பவானியின் உடலை ஆட்டோ மூலம் வீட்டிற்கு எடுத்து வந்தபோது, வீட்டின் சமையல் அறையில் தம்புசாமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.  தகவலறிந்த அயனாவரம் போலீசார் தம்பு சாமியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி இறந்த சோகத்தில் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அயனாவரம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.