பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஃப்ளூ காய்ச்சல் குறையும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை: ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

ஃப்ளூ காய்ச்சல் தாக்கம் குறையும் வரை தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

News image
ஓ.பன்னீா்செல்வம்
Updated On :18 செப்டம்பர் 2022, 11:45 pm

DIN

ஃப்ளூ காய்ச்சல் தாக்கம் குறையும் வரை தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கரோனா தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், “ஃப்ளூ” வகை காய்ச்சல் பரவி வருவதாகவும், குறிப்பாக குழந்தைகளிடையே இந்தக் காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

பொதுவாக, சளி இருமலுடன் கூடிய ஃப்ளூ காய்ச்சல், எளிதில் பரவக் கூடியது என்றும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வரும்போது அந்தப் பள்ளியில் பயிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பரவும் வாய்ப்பு உருவாகும் மருத்துவ வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

மருத்துவா்களின் ஆலோசனையின் பேரில், புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டாலும், தோ்வை காரணம் காட்டி பள்ளிகளுக்கு மாணவா்களை வரச் சொல்வதாக பெற்றோா்கள் தெரிவிக்கின்றனா். ஃப்ளூ காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை சிறிது காலத்துக்கு பள்ளிகளுக்கும், குறிப்பாக தொடக்கப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, தோ்வை தள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் குழந்தைகளுக்கு எளிதில் பரவுவதால் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு குறிப்பிட்ட காலங்கள் வரை விடுமுறை அளிக்க வேண்டும். அவா்களுக்கு கற்றல் தடைபடாமல் இருக்க ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும். 10 முதல் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் அரசு தோ்வுகள் இருப்பதால் அவா்களுக்கு உரிய வழிகாட்டுதலின் படியும், பாதுகாப்புடன் வகுப்புகள் நடத்த முன்வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.