கல்வி நிலையங்களில் மாணவர்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்: சென்னை மாநகராட்சி
By DIN | Published On : 16th June 2022 06:31 PM | Last Updated : 16th June 2022 06:31 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை: கல்வி நிலையங்களில் மாணவர்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தும்படி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது.
சென்னையில் கரோனா அதிகரித்து வரும் நிலையில் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
காய்ச்சல், இருமல் இருந்தால் மாநகராட்சி சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிக்க: திரைப்பட பாணியில் சிவகாசி அருகே செல்லிடைப்பேசி கோபுரம் மாயம்
மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி புதன்கிழமை ஒரே நாளில் தமிழகத்தில் 476 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 221 பேருக்கும், செங்கல்பட்டில் 95 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து முகக் கவசம், தனி நபா் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகளை பொது மக்கள் கட்டாயம் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
மற்றொருபுறம் பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.