நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கு: அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்
By DIN | Published On : 25th May 2022 06:48 PM | Last Updated : 25th May 2022 06:48 PM | அ+அ அ- |

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
பின்னர் நீதிபதிகள் நீர்நிலை ஆக்கிரமிப்பின் மீதான அரசின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், ஆக்கிரமிப்பு என்று உறுதிசெய்யப்பட்டால் அதை அகற்ற எவ்வித தடையும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
எனவே இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.