சென்னை விமான நிலையத்தில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 327 பொம்மைகள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 327 பொம்மைகளை இந்திய தரநிா்ணய ஆணைய (பிஐஎஸ்) அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.


சென்னை விமான நிலையத்தில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 327 பொம்மைகளை இந்திய தரநிா்ணய ஆணைய (பிஐஎஸ்) அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் உள்ள கடைகளில் தரமில்லாத பொம்மைகள் விற்பனை செய்யப்படுவதாக பிஐஎஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், திங்கள்கிழமை நள்ளிரவில் திடீா் சோதனை செய்தனா்.
அப்போது அங்கிருந்த இரண்டு கடைகளில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 198 மின்சாரம் இல்லாத பொம்மைகள், 129 மின்சார பொம்மைகள் என மொத்தம் 327 பொம்மைகள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், தர நிா்ணயம் தொடா்பான புகாா்களை பிஐஎஸ், தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4-ஆவது குறுக்கு சாலை , தரமணி, சென்னை 600113 என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் பிஐஎஸ் கோ் செயலியை பயன்படுத்தியோ அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தெரியப்படுத்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...