திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கண்டெடுத்த கருவூலம்!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் இருந்த இந்த நூல், தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு மணிவாசகர் பதிப்பகத்தால் மணி விழா (அரங்கு எண்- 219, 220) வெளியிடப்பட்டு விற்பனையில் உள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2023, 9:33 pm

DIN

இந்திய மொழிகள், முனைவர் ச.அகத்தியலிங்கம்,
 விலை ரூ.225, பக்.256;
 கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் இருந்த இந்த நூல், தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு மணிவாசகர் பதிப்பகத்தால் மணி விழா (அரங்கு எண்- 219, 220) வெளியிடப்பட்டு விற்பனையில் உள்ளது.
 பேராசிரியரான இந்த நூலின் ஆசிரியர் உலக மொழி வரலாறு, இந்திய மொழிகள், இந்தோஆரிய மொழிகள், திராவிட மொழிகள் என பல வகைகளாகப் பிரித்து படிப்போர் வியக்கும் வகையில் பல்வேறு ஆதாரங்களையும் அளித்துள்ளார்.
 நம் நாட்டில் 1,300 மொழிகள் பேசப்பட்டு வருவதாகக் கூறும் நூலாசிரியர், அதில் ஹிந்தி, தமிழ், அஸாமி, தெலுங்கு உள்ளிட்டவற்றை வரிசைப்படுத்தியுள்ளார்; எந்த மொழியை எத்தனை பேர் பேசுகிறார்கள், அவை தற்போது எந்த நிலையில் இலக்கிய வளத்துடன் உள்ளது என்பன போன்ற புள்ளிவிவரங்களும் நூலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 நாட்டில் கடந்த 1981-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஹிந்தி பேசுவோர் அதிகமாகவும், தமிழ் மொழியை 4 கோடி பேருக்கும் அதிகமானோர் பேசுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்திய மொழிகளில் தமிழ் எப்படி தனித்துவப்பட்டுள்ளது என்பதை விளக்கியுள்ளது தனிச்சிறப்பாகும்.
 சர்வதேச அளவிலான மொழியியல் ஆய்வாளர்களின் கருத்துகளுடன் இந்திய மொழிகளை, மேலை நாட்டு மொழிகளுடன் ஒப்பீடு செய்தும் நூலாசிரியர் மொழி வளர்ச்சியை விளக்கியுள்ளார்.
 இந்திய மொழிகள் குறித்து தமிழில் எழுதப்பட்ட முதல் நூலான இதில், வடபுல மொழிகளது வளர்ச்சி, தளர்ச்சி என அனைத்தும் ஆய்வு முறையில் விளக்கப்பட்டிருப்பது சிறப்பாகும்.
 இந்த நூல், தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.