பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தமிழருவி மணியனின்...

சென்னை புத்தகக் காட்சியில் காமராஜ் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியனின் சுதந்திர வேள்வி எனும் 5 நூல்கள் வெளியீட்டு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2023, 9:30 pm

DIN

சென்னை புத்தகக் காட்சியில் காமராஜ் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியனின் சுதந்திர வேள்வி எனும் 5 நூல்கள் வெளியீட்டு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
 புத்தகக் காட்சி அலுவலக வளாகத்தில் ரெளத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார். நூல்களின் முதல் படிகளை முன்னாள் மத்திய அமைச்சரும், தமாகா தலைவருமான ஜி.கே.வாசன் வெளியிட்டார்.
 நூல்களின் முதல் படிகளை முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். ஐ.நா. சபை சமரசப் பிரிவின் அலுவலர் ரா.கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். பாஞ்சாலி குறும்பட இயக்குநர் ரா.சுப்பிரமணிய பாரதி நன்றி கூறினார்.
 அமைச்சர்கள் வருகை: புத்தகக் காட்சிக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் புதன்கிழமை இரவு வந்து அரங்குகளில் புத்தகம் வாங்கினர். காலச்சுவடு, நீலம் ஆகிய அரங்குகளுக்கு அவர்கள் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.