வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சென்னை கே.கே.நகரில் திடீர் தீ விபத்து!

ராஜமன்னார் சாலை சந்திப்பு மைதானத்தில் போக்குவரத்து துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :12 ஜூன் 2023, 5:41 pm

DIN

சென்னை: ராஜமன்னார் சாலை சந்திப்பு மைதானத்தில் போக்குவரத்து துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ மள மளவென பரவி அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் பரவியது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. 

இந்த தீ விபத்தில் இரண்டு பேருந்துகள், ஒரு லாரி, ஒரு டாடா மேஜிக், இரண்டு கார்கள், இரண்டு ஆட்டோக்கள் ஆகியவை தீப்பற்றி எரிந்தன.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.