

சென்னை, அரும்பாக்கத்தில் வெந்நீர் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரும்பாக்கம் அருகே தந்தை பரத் என்பவரின் ஒன்றரை வயது குழந்தை ஹரிஹரன். கடந்த சில நாள்களுக்கு முன்பு பரத் குளிப்பதற்காக வெந்நீர் சுடவைத்து, குளியலறைக்கு அருகே வைத்துவிட்டு வேறொரு அறைக்குச் சென்றுள்ளார்.
எதிர்பாராதவிதமாக குழந்தை வெந்நீரை நோக்கி வேகமாகச் சென்று பாத்திரத்தைக் கவிழ்த்துள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்குப் பெற்றோர் ஓடி வந்தனர்.குழந்தை ஹரிஹரனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, பதறிப்போன நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்த ஹரிஹரன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.