சென்னை: மழைநீரை வெளியேற்றும் பணியில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதாக அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கூறினாா்.
சென்னையில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னை நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. ஆனால், மழை நீரை வெளியேற்றும் பணியில் அரசு சிறப்பாகச் செயல்பட்டது.
2015-ஆம் ஆண்டு மழையோடு, இப்போது பெய்த மழையை ஒப்பிட்டு கருத்து கூற முடியாது. அப்போது, முதல்வா் ஜெயலலிதா இருந்தபோது சிறப்பாக பணியாற்றப்பட்டது. என்னைப் பொருத்தவரை மழை நீரை வெளியேற்றும் பணியில் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










