தொடரும் அமளி! நாடாளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடிகிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

நீட் பிரச்னைகளுக்குத் தீர்வு? பிரதமர் மோடி கூறுவது பொய்! காங்கிரஸ்

நீட் விவகாரத்தில் பிரதமர் மோடியின் கூற்றுகள் பொய்யானவை என்று காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் பேசியுள்ளது பற்றி...

News image

பிரதமர் இல்லம் முன்பாக காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது - கோப்புப் படம்

Updated On :23 ஜூலை 2026, 11:11 am IST

நீட் விவகாரத்தில் பிரதமர் மோடியின் கூற்றுகள் பொய்யானவை என்று காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் வியாழக்கிழமை (ஜூலை 23) தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராடி வருகின்றனர்.

ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் உள்பட ஏராளமான மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் நாட்டிலேயே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ”நாட்டின் இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும். வினாத்தாள் கசிவு சம்பவங்களில் வழக்குகளுக்கு விரைவான தீர்வு காண்பதையும், குற்றவாளிகளுக்கு விரைவான, கடுமையான தண்டனை வழங்குவதையும் உறுதி செய்வதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் பேசியதாவது:

இவை பொய்யான கூற்றுகள். இப்போது யாரும் அவர் (பிரதமர் மோடி) வார்த்தைகளை நம்புவதில்லை. அவரது மீதுள்ள நம்பகத்தன்மையை மக்கள் ஏற்கெனவே இழந்துவிட்டனர். அரசாங்கத்திடமிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை. முதலில், அவர் தர்மேந்திர பிரதானை கல்வி அமைச்சகத்திலிருந்து நீக்க வேண்டும். அதன் பிறகுதான் அவர் மாணவர்களிடம் பேச வேண்டும் என்று கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Summary

Congress General Secretary K.C. Venugopal stated on Thursday (July 23) that Prime Minister Narendra Modi should speak to students, bypassing Union Education Minister Dharmendra Pradhan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.