ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) கேள்வி எழுப்பியுள்ளார்.
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நன்கொடை மற்றும் காணிக்கை நிதியில் பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலரான கே.சி. வேணுகோபால் இரண்டு நாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சென்றுள்ளார். வரும் 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் பணிகளை ஆய்வு செய்வதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக சொல்லப்பட்டது.
அங்கு செய்தியாளர்களிடம் கே.சி. வேணுகோபால் பேசியதாவது:
என்னிடம் ஒரே கேள்விதான் உள்ளது. ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு செய்யப்பட்டதற்கு யார் பொறுப்பு? ராமர் கோயிலின் அறக்கட்டளை பிரதமரின் மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது. அவர் ஏன் அமைதி காக்கின்றார்?
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும். மேலும், இந்த பிரச்னையை எங்கள் கட்சி நாடாளுமன்றத்தில் விவாதிக்கும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் முழு வலிமையுடன் உள்ளனர். மாநிலத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
Summary
Congress General Secretary K.C. Venugopal has questioned why Prime Minister Narendra Modi is maintaining silence on the Ram Temple donation irregularities case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை: காங்கிரஸ்

அயோத்தி நன்கொடை திருட்டை மூடிமறைக்க பாஜக-ஆர்எஸ்எஸ் முயற்சி: காங்கிரஸ்

மோடி - ஷா ஆட்சியால் ஜனநாயகத்துக்கு கடுமையான அச்சுறுத்தல்: காங்கிரஸ்







