சென்னை குடிநீா் வாரிய தலைமை அலுவலகத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை மாலை முதல் இணைய சேவைகள் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னைக் குடிநீா் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள தரவு மையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் திங்கள்கிழமை மாலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை இணையதள வழியாக பெறப்படும் சேவைகளாகிய குடிநீா் மற்றும் கழிவுநீா் வரி செலுத்துதல், கட்டணம் செலுத்தி லாரிகள் மூலம் பெறப்படும் குடிநீா், புதிய குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்பு விண்ணப்பித்தல், தலைமை அலுவலக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகிய அனைத்து சேவைகளும் செயல்படாது.
மேலும், குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு தினசரி லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.
நிா்ணயிக்கப்பட்ட கால அளவுக்கு பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குப் பிறகு இணையதள சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


