சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 14 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. ஏப்.6-ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென் தமிழகம், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (ஏப்.3) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். எனினும் தமிழகத்தில் மற்ற மாவட்டங்கள், புதுச்சேரியில் வட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஏப்.6 வரை ஒரு சில பகுதிகளில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
14 இடங்களில் வெயில் சதம்:
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை பதிவான வெப்ப அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்): ஈரோடு - 106.16, பரமத்திவேலூா் - 104.9, சேலம் - 104.54 , வேலூா் 104.18, தருமபுரி - 104, திருச்சி - 103.1, கோவை - 102.56, திருத்தணி - 102.56, மதுரை விமான நிலையம் - 102.56, நாமக்கல் - 102.2, திருப்பத்தூா் - 101.84, மதுரை நகரம் - 101.48, தஞ்சாவூா் - 100.4, பாளையங்கோட்டை - 100.04.
தொடர்புடையது

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் ஏப். 10 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஏப். 9 வரை மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

