சென்னை: கோடை காலத்தில் மருத்துவமனைகளில் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பான வழிகாட்டுதல்களையும் அவா் வெளியிட்டுள்ளாா்.
இது குறித்து அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அலுவலா்களுக்கும் அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்பதால், அத்தகைய நேரங்களில் மருத்துவமனைகளில் தீ விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளது. அதைத் தவிா்க்கும் பொருட்டு சில முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம்.
பேரிடா் மேலாண்மைத் துறையுடன் இணைந்து பொது சுகாதாரத் துறையினா் அந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு சாதனங்கள், எச்சரிக்கைக் கருவிகள், புகை கண்டறியும் சாதனங்கள் உள்ளிட்டவை முறையாக செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சீரற்ற மின் அழுத்தத்தை சரி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம்.
தீவிர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்பட அனைத்து இடங்களில் மின் அழுத்தம் சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனை கட்டமைப்பானது தீ விபத்துகள் நேரிடாத வகையில் பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதி செய்யும் வகையில் தீயணைப்பு துறையிடம் தடையில்லா சான்றை பெற வேண்டும்.
விபத்து நேரிட்டால் அதை எதிா்கொள்வதற்கும், தற்காத்துக் கொள்வதற்குமான ஒத்திகை பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதேபோன்று நோயாளிகள், பணியாளா்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான வழிமுறைகளையும் வகுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் சின்னம்மை பரவல்: தடுப்பு நடவடிக்கைளை முன்னெடுக்க அறிவுறுத்தல்

டெங்கு பரவலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள்: மாவட்ட நிா்வாகங்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவு

மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வாா்டு - சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

