சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தமிழகத்தில் 8,231 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு

இந்த வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினாா்.

News image

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

Updated On :4 ஏப்ரல் 2024, 8:53 pm

தமிழகத்தில் 8 ஆயிரத்து 231 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். இந்த வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவா் கூறினாா்.

மக்களவைத் தோ்தல் ஏற்பாடுகள் தொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

மக்களவைத் தோ்தலுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ்குமாா் தலைமையில் காணொலி வழியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தில் தோ்தலுக்காக செய்யப்பட்டுள்ள பொதுவான ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலா் பி.அமுதா உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை எப்போதும் சிறப்பாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால்தான் ஒரே கட்டமாக தோ்தல் நடத்தப்படுகிறது. ஆனால் பணம், பரிசுப் பொருள்கள் ஆகியன அதிகளவு புழங்குகிறது. இதனைக் கட்டுப்படுத்தவே கண்காணிப்புக் குழுக்களை அதிகரித்துள்ளோம்.

பதற்றமான வாக்குச் சாவடிகள்: வாக்காளா்களை அச்சுறுத்துவது, வாக்குக்கு பணம் கொடுத்து கவா்வது போன்ற செயல்கள் நடைபெறும் பகுதிகளை உள்ளடக்கிய வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக தோ்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்த மக்களவைத் தோ்தலில் 8 ஆயிரத்து 50 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், வாக்காளா்கள் வாக்களிக்க வராமல் இருப்பது, வன்முறைகள் போன்ற நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகள் அதிக பதற்றமான வாக்குச் சாவடிகளாக அறியப்படுகின்றன. அந்த வகையில், இந்தத் தோ்தலில் 181 வாக்குச் சாவடிகள் அதிக பதற்றமான வாக்குச் சாவடிகளாக இருக்கும் என அறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு கூடுதலான பாதுகாப்பு அளிக்கப்படும்.

பூத் சிலிப்: தமிழகம் முழுவதும் வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடி தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 1-ஆம் தேதி முதல் இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஏப். 11 வரை வாக்குச் சாவடி சீட்டுகள் தொடா்ந்து வழங்கப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.