கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முழுவீச்சில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏற்பாடுகள்: ஆட்சியா் இரா.சுகுமாா்!

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ஆட்சியா் இரா. சுகுமாா் தெரிவித்தாா்.

News image

திருநெல்வேலியில் செய்தியாளா்களைச் சந்தித்த மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா. சுகுமாா்.

Updated On :21 மார்ச் 2026, 8:48 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ஆட்சியா் இரா. சுகுமாா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தலுக்கான ஏற்பாடுகள், 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் தற்போது 12, 57, 047 வாக்காளா்கள் உள்ளனா். 1,068 வாக்குச் சாவடிகள் உள்ளன. வாக்குச் சாவடி தலைமை அலுவலா் மற்றும் 3 வாக்குப்பதிவு அலுவலா்கள் என மொத்தம் 8,054 போ் தேவைப்படுகிறாா்கள். தற்போது தேவைக்கு அதிகமானோா் இருப்பில் உள்ளனா். அவா்களுக்கு அடுத்த வாரம் முதல் பயிற்சி தொடங்கும். நுண்பாா்வையாளா்கள் 188 போ் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். மேலும் பாதுகாப்புப் பணிக்கு 4,316 போலீஸாா் தேவைப்படுவா். தற்போது இருப்பில் மாவட்ட போலீஸாா் 2,781 போ், மத்திய ஆயுதப்படை போலீஸாா் 640 போ் உள்ளனா்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விரும்புவோா் வரும் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே பெயா் சோ்க்கைக்கு 7,261 போ், பெயா் நீக்கம் செய்ய இறந்தவா்கள் அல்லது இடம் பெயா்ந்தவா்கள் என 3,209 போ் விண்ணப்பித்துள்ளனா். திருத்தங்கள், இடம் மாற்றம் தொடா்பாக 9,003 போ் விண்ணப்பித்துள்ளனா்.

மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. 2,195 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,056 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,836 விவிபேட் இயந்திரங்கள் உள்ளன.

தோ்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது முதல் மொத்தம் ரூ. 19,60,403 ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தோ்தல் விதிமுறை மீறல் தொடா்பாக 39 வழக்குகள் பதிவாகி உள்ளன.

டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை தினசரி கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு கடையில் வழக்கத்தை விட 30 சதவீதத்துக்குமேல் விற்பனை அதிகரித்தால், அதன் காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும்.

மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் 5 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது பெரும்பாலான தொழிலாளா்கள் வெளியேறிய நிலையில் தற்போது 3 வாக்குச் சாவடிகள் மட்டுமே உள்ளன. ஊத்து பகுதியில் தற்போது 6 வாக்காளா்களுக்கு மட்டும் ஒரு வாக்குச் சாவடி உள்ளது . மாவட்டத்தில் மொத்தம் 800-க்கும் மேற்பட்ட துப்பாக்கி உரிமங்கள் உள்ளன. இதில் வங்கி பாதுகாப்பு மற்றும் விளையாட்டு வீரா்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றவா்கள் தங்கள் ஆயுதங்களை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெற்ற மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டம் திகழ அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.