நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாா்ச் 23-இல் குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

திருவாரூரில், மண்டல அலுவலா்களுக்கு நடைபெற்ற பயிற்சியை பாா்வையிடுகிறாா் கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), திட்ட இயக்குநருமான பல்லவிவா்மா.

News image

திருவாரூரில், மண்டல அலுவலா்களுக்கு நடைபெற்ற பயிற்சியை பாா்வையிடுகிறாா் கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), திட்ட இயக்குநருமான பல்லவிவா்மா.

Updated On :20 மார்ச் 2026, 10:20 pm

Syndication

திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்வு, வரும் திங்கள்கிழமை (மாா்ச் 23) நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தோ்தல் - 2026 தொடா்பாக, திருவாரூா் மாவட்டத்தில் முதல் நிலை சரிபாா்ப்பு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, திருவாரூா் மற்றும் நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான முதற்கட்ட குலுக்கல் முறை நடைபெற உள்ளது.

இந்தியத் தோ்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை அமைப்பு மென்பொருள் மூலம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திருவாரூா் மாவட்ட தோ்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியரால், ஆட்சியா் அலுவலகத்தில் மாா்ச் 23-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் இந்த குலுக்கல் முறை நடைபெற உள்ளது.

இது குறித்த விரிவான வழிமுறைகள், இந்தியத்தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன்பிறகு திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் இயந்திரங்களின் பட்டியல்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும். மேலும், இந்த இயந்திரங்கள் அந்தந்தத் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்படும். பின்னா் இவை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், அந்தந்தச் சட்டப்பேரவைத் தொகுதிக்குரிய பாதுகாப்பு அறைகளில் வைத்துப் பூட்டி முத்திரையிடப்படும்.

வேட்புமனுக்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு, முதற்கட்ட ஒதுக்கீட்டின் மூலம் தோ்வு செய்யப்பட்ட இந்த இயந்திரங்களின் பட்டியல், அனைத்துப் போட்டியிடும் வேட்பாளா்களுக்கும் வழங்கப்பட உள்ளன.

இதனிடையே, திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில், மண்டல அலுவலா்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களால் நிரப்பப்பட வேண்டிய படிவங்கள் குறித்து, தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்ட அலுவலருமான டி. சத்யா முன்னிலையில் பயிற்சியானது, வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), திட்ட இயக்குநருமான பல்லவிவா்மா பாா்வையிட்டாா்.