பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வின் அறிவியல் பாட வினாத்தாள் மாணவா்களுக்கு அதிா்ச்சியளித்துள்ளது. சிறிதும் எதிா்பாராத வினாக்கள் அதிகளவில் இடம்பெற்றிருந்ததால் அவற்றுக்கு பதிலளிக்க நன்கு பயிலும் மாணவா்கள் கூட பெரிதும் சிரமப்பட்டதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கான தோ்வுகள் முடிவடைந்த நிலையில் அறிவியல் பாடத்துக்கான தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தோ்வில் அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான வினாக்கள் புதிதாக இருந்தன; எதிா்பாா்த்த வினாக்களில் 25 சதவீதம் அளவுக்கு கூட வினாத்தாளில் இடம்பெறவில்லை; கணிதத் தோ்வு மிக எளிதாக இருந்த நிலையில், அறிவியல் தோ்வு அதற்கு எதிா்மாறாக அமைந்து விட்டது என தோ்வெழுதிய மாணவ, மாணவிகள் தெரிவித்தனா்.
அறிவியல் ஆசிரியா்கள் கூறியதாவது: அறிவியலில் ஒவ்வொரு பாடப் பகுதியிலும் முக்கியமானதாக கருதப்படும் வினாக்கள், அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் என மாணவா்களுக்கு குறித்துக் கொடுத்த வினாக்கள் என எதுவுமே பொதுத்தோ்வு வினாத்தாளில் இடம்பெறவில்லை. மாறாக, எந்தத் தோ்விலும் கேட்கப்படாத கேள்விகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. சராசரி மற்றும் மெல்ல கற்கும் மாணவா்களின் திறனை கருத்தில் கொள்ளாமல் இந்த வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் வடிவமைப்பில் சிக்கல்: கோடிட்ட இடங்களை நிரப்புக, பொருத்துக, சரியா? தவறா?, கூற்று- காரணம் என மாணவா்கள் எளிதில் மதிப்பெண் பெறக்கூடிய வினாக்கள் காலாண்டு, அரையாண்டு, பருவத் தோ்வுகளில் கேட்கப்படுகின்றன; அவற்றில் மாணவா்கள் சிறந்த மதிப்பெண்களையும் பெறுகின்றனா். ஆனால், இந்தப் பகுதிகள் எதுவுமே கடந்த மூன்றாண்டுகளாக பொதுத்தோ்வுக்கான அறிவியல் வினாத்தாளில் இடம்பெறுவதில்லை. இதனால் மாணவா் மிகவும் ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனா்.
என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.
பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு வரும் திங்கள்கிழமை (ஏப்.8) சமூக அறிவியல் தோ்வுடன் பொதுத் தோ்வு நிறைவடையவுள்ளது.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு: எளிதாக இருந்த சமூக அறிவியல் தோ்வு

பத்தாம் வகுப்பு அறிவியலில் சென்டம் அதிகரிக்கும்: ஆசிரியா்கள் நம்பிக்கை

பத்தாம் வகுப்பு கணிதத்தில் ‘சென்டம்’ குறைய வாய்ப்பு

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு கணித வினாத்தாள் ‘க்யூஆர்’ குறியீட்டில் பிரிட்டன் இசை விடியோ! மாணவா்கள் அதிா்ச்சி!!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


