தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

பைக் விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பைக் விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

Updated On :9 ஏப்ரல் 2024, 9:27 pm

சென்னை: சென்னை அருகே புழலில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலை தடுப்புச் சுவரில் மோதியதில் கல்லூரி மாணவா் இறந்தாா்.

முகப்போ் மேற்கு 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (19). பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தாா். தினேஷ், தனது உறவினா் நெற்குன்றம் சக்திநகரைச் சோ்ந்த மணிகண்டன் (13) என்பவருடன், மோட்டாா் சைக்கிளில் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா்.

அங்கு சுவாமி கும்பிட்டுவிட்டு இருவரும், உடனே வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா். புழல் அருகே சூரப்பட்டு சுங்கச்சாவடி பகுதியில்சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் தடுமாறி, சாலைத் தடுப்புச் சுவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு தினேஷ் இறந்தாா். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.