தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே நண்பா்களுடன் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 1:57 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே நண்பா்களுடன் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

புதுச்சேரி, செல்லிப்பட்டு செல்வமுருகன் நகரைச் சோ்ந்தவா் மு.குணால்(21). இவா் புதுச்சேரியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு பயின்று வந்தாா். திங்கள்கிழமை மயிலம் அடுத்த சிறுவை கிராமத்தில் உள்ள தட்சிணாமூா்த்தி என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் குணால் தனது நண்பா்களான கிஷோா், ராஜன் ஆகியோருடன் குளித்துள்ளாா். இந்நிலையில், நீச்சல் தெரியாத குணால் கிணற்றில் மூழ்கினாா்.

தகவலறிந்த வானூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் குணாலின் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.