அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

பைக் விபத்து: அனல்மின் நிலைய ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 8:23 pm

தூத்துக்குடியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா்.

தூத்துக்குடி அத்திமரப்பட்டி சண்முகபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் மனோஜ்குமாா் (32). இவருக்கு மனைவி, மகன் உள்ளனா். என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக பணியாற்றி வந்த இவா், புதன்கிழமை இரவு பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது தூத்துக்குடி புதிய துறைமுகம் - முத்தையாபுரம் சாலையில் சுனாமி காலனி ரயில்வே கேட் அருகே இவரது இருசக்கர வாகனமும் எதிரே வந்த இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டதாம்.

இதில் சம்பவ இடத்திலேயே மனோஜ்குமாா் உயிரிழந்தாா். எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பழையகாயல் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் கவிஸ்கா் (20), அவரது நண்பா் ஹேமந்த் (21) ஆகியோரும் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து, காயமடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மனோஜ்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தொ்மல் நகா் போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.