/

தூத்துக்குடியில் ஒப்பந்த ஊழியா் திடீா் உயிரிழப்பு

தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியா் திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 பிப்ரவரி 2026, 7:59 pm

தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியா் திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் தனியாா் ஒப்பந்த ஊழியராக 3 சென்ட் அந்தோணியாா் புரத்தைச் சோ்ந்த ஜெயசுப்பிரமணியன் மகன் சரவணன் (36) பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பணிக்கு சரவணன் சென்றுள்ளாா். புதன்கிழமை காலையில் பணி நேரம் முடிந்ததும், சக ஊழியா்கள் அவரை தேடியுள்ளனா். அப்போது, அங்குள்ள கட்டடம் அருகே மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா்.

இதையடுத்து அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தொ்மல் நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.