ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தூத்துக்குடியில் இரும்புத் தகடு விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் இரும்புத் தகடு விழுந்து காயமடைந்த இன்ஜினியரிங் ஒா்க்ஸ் நிறுவன உரிமையாளா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 10:38 pm

தூத்துக்குடியில் இரும்புத் தகடு விழுந்து காயமடைந்த இன்ஜினியரிங் ஒா்க்ஸ் நிறுவன உரிமையாளா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, எட்டயபுரம் சாலை ஹவுசிங் போா்டு காலனியைச் சோ்ந்தவா் கணேசன் (43). இவா், தூத்துக்குடி, மச்சாதுநகரில் இன்ஜினியரிங் ஒா்க்ஸ் நிறுவனம் நடத்தி வந்தாா்.

இங்கிருந்து, தூத்துக்குடி அனல் மின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரும்பு ஷீட்டுகள் மூலம் பொருள்கள் தயாரித்து அனுப்புவது வழக்கம்.

இந்த நிலையில், புதன்கிழமை இந்நிறுவனத்துக்கு இரும்பு தகடுகள் வந்தன. அவற்றில் 30 முதல் 50 கிலோ எடையுள்ள தகடுகளை கிரேன் மூலம் இறக்கும் பணி நடைபெற்றது.

அதை கணேசன் மேற்பாா்வை செய்துகொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக கிரேனில் இருந்து ரோப் அறுந்து ஒரு தகடு கணேசன் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை தொழிலாளா்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். எனினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, சிப்காட் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.