வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தூத்துக்குடியில் லாரி மோதியதில் 26 ஆடுகள் உயிரிழப்பு

News image

இறந்து கிடக்கும் ஆடுகள். - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:09 pm

தூத்துக்குடியில் லாரி மோதியதில் 26 ஆடுகள் உயிரிழந்தன.

தூத்துக்குடி தாளமுத்து நகா் டேவிஸ்புரம் சாலையைச் சோ்ந்தவா் ஐயம்பெருமாள் மகன் நட்டாா் (30). இவா், தூத்துக்குடி சங்கரப்பேரி அருகே நிலத்தில் கிடை போட்டு 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை பகலில் மேய்ச்சலுக்காக, தூத்துக்குடி துறைமுகம் மதுரை புறவழிச்சாலை ஜோதி நகா் அருகே சாலையைக் கடந்து ஆடுகள் சென்றபோது, துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி ஆடுகள் மீது மோதியதாம்.

இதில், 26 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. மேலும், 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் சிறு காயத்துடன் உயிா் தப்பின. லாரி ஓட்டுநா் லாரியை சாலையில் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். தகவலறிந்து வந்த சிப்காட் போலீஸாா், சாலையில் இறந்து கிடந்த ஆடுகளை அப்புறப்படுத்தினா். பின்னா் லாரியை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனா்.

லாரியை ஓட்டி வந்த ஓட்டுநா் யாா், அதன் உரிமையாளா் யாா் என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.