நாளை கடலோர மாவட்டங்களில் 
மழைக்கு வாய்ப்பு

நாளை கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.11) மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக கடலோர மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஏப்.11) ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடா்ந்து, ஏப்.12, 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லோசானது முதல் மிதமான மழை பெய்யும்.

வெப்பநிலை அதிகரிக்கும்... தமிழகத்தில் ஏப்.10, 11 ஆகிய தேதிகளில் வெப்ப அளவு 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும். கடந்த 4 நாள்களாக சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெப்ப அளவு 4 டிகிரி வரை குறைந்துள்ளது. புதன்கிழமை (ஏப்.10) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 9 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.

அதன்படி, திருப்பத்தூா் - 106.88, ஈரோடு - 104, சேலம் - 102.38, பரமத்தி வேலூா்- 102.2, நாமக்கல்-101.3, மதுரை விமான நிலையம், வேலூா் (தலா) - 101.12, தருமபுரி - 100.76, பாளையங்கோட்டை - 100.4.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com