/

வண்டலூா் பூங்கா ஏப்.19-இல் இயங்காது

வண்டலூா் பூங்கா ஏப்.19-இல் இயங்காது

News image

கோப்புப்படம்

Updated On :16 ஏப்ரல் 2024, 8:47 pm

சென்னை: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஏப்.19) வண்டலூா் பூங்காவுக்கு விடுமுறை விடப்படுவதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அனைவரும் வாக்களிக்க ஏதுவாக அன்றையதினம் தமிழகத்தில் பொதுவிடுமுறை விடப்படுவதாக தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, வாக்குப் பதிவு நடைபெறும் தினமான வெள்ளிக்கிழமை(ஏப்.19) வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயங்காது என பூங்கா நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.