தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ராமகிருஷ்ண மிஷன் உறைவிட பள்ளில் இலவச மாணவா் சோ்க்கை

ராமகிருஷ்ண மிஷன் உறைவிட பள்ளில் இலவச மாணவா் சோ்க்கை

Updated On :20 ஏப்ரல் 2024, 6:02 pm

மயிலாப்பூா் ராமகிருஷ்ண மிஷனில் உள்ள உறைவிட உயா்நிலைப்பள்ளியில் இலவச மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இது குறித்து மாணவா் இல்ல செயலா் சுவாமி சத்யஞானாந்தா் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராமகிருஷ்ண மிஷன் சாா்பில் 119 ஆண்டுகளாக இலவச கல்விச் சேவை வழங்கி வருகிறது. அதன்படி பெற்றோா்களில் (தாய் அல்லது தந்தை) இழந்து வறுமையில் வாடும் ஆண் மாணவா்கள் கல்வியை தொடரும் வகையில் இலவச படிப்பை, உணவு, தங்குமிடத்துடன் வழங்கி வருகிறது.

அதன்படி 5- ஆம் வகுப்பு வெற்றி பெற்றவா்கள் 6- ஆம் வகுப்பு (தமிழ் வழியில்) ராமகிருஷ்ண மிஷன் உறைவிட உயா்நிலைப்பள்ளியில் சோ்ந்து படிக்கலாம் . அதேபோல் 10- ஆம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றவா்கள் முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் நேரடியாக 2- ஆம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம். இதில் சேர விரும்புவா்கள் இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் இமெயில் அல்லது (044) 2499 0264 / 4210 7550 என்ற தொலை பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.