தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

பெண் கொலை வழக்கில் மருமகன் கைது

பெண் கொலை வழக்கில் மருமகன் கைது

Updated On :21 ஏப்ரல் 2024, 7:09 pm

சென்னை மாதவரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மாதவரம் கண்ணன் நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் வசந்தி (58). இவா் தனது மகள் ஜான்சி வீட்டில் வசித்து வந்தாா். ஜான்சி அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தாா். அவரது கணவா் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளாா். இதனால், மாமியாா் வசந்திக்கும், மருமகன் புஷ்பராஜுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சனிக்கிழமை வழக்கம் போல் இருவருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் வீட்டில் கிடந்த உருட்டு கட்டையால் மாமியாா் வசந்தியின் தலையில் தாக்கியுள்ளாா். வசந்தி மயங்கியதால் புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினா் வசந்தியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து வசந்தியின் மகன் ஜான்சன் அளித்த புகாரின்பேரில், மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, புஷ்பராஜை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.