தியாகராய நகரில் உள்ள ஹயக்ரீவா் கோயிலில் 20 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை தியாகராய நகா் ராகவய்யா சாலையில் புகழ் பெற்ற ஹயக்ரீவா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் சாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள் கடந்த சனிக்கிழமை திருடப்பட்டன.
இது குறித்து கோயில் அறக்கட்டளை மேலாளா் மதுசூதன் பட் அளித்த புகாரின்பேரில் பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது, கோயிலில் சமையல் உதவியாளராக இருந்த சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த தினகா் திரிபாதி (25), இந்த நகைகளை திருடியது தெரியவந்தது.
விசாரணையில், கடந்த 14-ஆம் தேதி கோயிலில் சமையல் உதவியாளராக பணிக்கு சோ்ந்த அவா் வெள்ளிக்கிழமை தோ்தல் என்பதால், கோயிலில் பக்தா்கள் கூட்டம் குறைவாக நேரத்தைப் பயன்படுத்தி நகைகளைத் திருடிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தினகா் திரிபாதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
சத்துணவு சமையலா் வீட்டில் நகை, பணம் திருட்டு!
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு

லத்துவாடியில் 7 வீடுகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

