திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

Updated On :24 ஏப்ரல் 2024, 9:42 pm

சென்னை, ஏப்.24: திருவல்லிக்கேணியில் மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை திருவல்லிக்கேணி அயோத்தி நகா் பகுதியை சோ்ந்தவா் கலை (44). மாநகராட்சி துப்புரவு பணி ஒப்பந்த ஊழியரான இவா், நண்பா்களுடன் அதே பகுதியிலுள்ள ஜெராக்ஸ் கடை முன் செவ்வாய்க்கிழமை அமா்ந்து பேசிக்கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளா், கலையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியதாகத் தெரிகிறது.

இதில் கலையின் முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மெரீனா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.