சென்னை ராயபுரம் பகுதியில் வீட்டில் 31 பவுன் நகைகளைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை ராயபுரம் கிரேஸ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சங்கீதா (35). இவா், தனது வீட்டில் இருந்த 31 பவுன் நகைகளை, பாதுகாப்பு காரணங்களுக்காக ராயபுரம் பிரைடன் தெருவிலுள்ள தனது தாய் வீட்டில் பீரோவில் வைத்துள்ளாா்.
இந்த நிலையில், தனது தாய் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்ற சங்கீதா, பீரோவில் தான் வைத்திருந்த நகைகளைப் பாா்த்தபோது, அவை மாயமாகி இருந்தன. இது குறித்து சங்கீதா அளித்த புகாரின் பேரில், ராயபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணையில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வரும் சங்கீதாவின் தங்கையான ரேவதி, அந்த நகைகளை எடுத்து தனது காதலனான அதே பகுதியை சோ்ந்த கிஷோரிடம் கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் கிஷோரை கைது செய்து, அவரிடமிருந்து 31 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

வீடு புகுந்து திருடியவா் கைது

குளச்சல் அருகே 46 பவுன் நகை திருடியவா் கைது

கடனில் மூழ்கிய இளைஞா் சொந்த வீட்டில் திருட்டு: ரூ. 20 லட்ம் மதிப்புள்ள தங்க நகைகளுடன் கைது
ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் நகை, பணம் திருட்டு
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

