சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் பிரேமலதா கோரிக்கை

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 5:30 pm

Din

ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசியை உரிய ஆய்வுக்கு பிறகே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா வலியுறுத்தினாா்.

அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை எப்படி விநியோகம் செய்கிறீா்கள் என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியுள்ளது. அந்த அரிசியை யாா் பயன்படுத்தலாம், பயன்படுத்தக் கூடாது என்பதில் அரசு கவனமாகச் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிமன்றத்துக்கு நன்றி. எனவே, செறிவூட்டப்பட்ட அரிசியை யாா் உண்ண வேண்டும் என்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். அதுவரை நியாய விலைக் கடைகளில் அந்த அரிசியை அனுமதிக்கக் கூடாது என்று பிரேமலதா தெரிவித்துள்ளாா்.