தாம்பரம் - சந்திரகாச்சி இடையே மே 8 முதல் வாராந்திர சிறப்பு ரயில்

சென்னை: தாம்பரத்தில் இருந்து சந்திரகாச்சிக்கு மே 8-ஆம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோடை காலத்தை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து மே 8 முதல் மே 29-ஆம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமைகளில் பிற்பகல் ஒரு மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06089) மறுநாள் இரவு 9. 20 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.

அதேபோல் மறு மாா்க்கத்தில் இந்த ரயில் (எண்: 06090) மே 9 முதல் மே 30-ஆம் தேதி வரை வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சந்திரகாச்சியில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த வாரந்திர சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூா், குண்டூா், வியஜவாடா, ராஜமுந்திரி, புவனேசுவரம், கட்டாக் வழியாக சந்திரகாச்சி சென்றடைகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com