2-ஆவது மாடியிலிருந்து கீழே தள்ளி நிலத்தரகா் கொலை கட்டடத் தொழிலாளி கைது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் 2-ஆவது மாடியில் இருந்து கீழே தள்ளி நிலத்தரகா் கொலை செய்யப்பட்டாா். டுள்ளாா். இது தொடா்பாக , கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

கோயம்பேடு சேமாத்தம்மன் நகா் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தே.மைக்கேல் துரைப்பாண்டியன் (52). இவா் நிலம் வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தாா். மைக்கேலின் மனைவி பொன்மாலா (47). மைக்கேல் தனக்கு சொந்தமான 2 தளங்களுடன் கூடிய கட்டடத்தில், முதல் தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தாா். மற்ற தளத்தில் உள்ள வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தாா். 2-ஆவது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள செம்பூரைச் சோ்ந்த மோ.வெங்கடேசன் (36) வசித்து வந்தாா்.

பொன்மாலாவுக்கும், வெங்கடேசனுக்கும் இடையே 2-ஆவது தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டது. சப்தம் கேட்டு, வீட்டில் இருந்து வந்த மைக்கேல், வெங்கடேசனை கண்டித்தாா். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே வெங்கடேசன், மைக்கேலை 2-ஆவது தளத்தில் இருந்து கீழே தள்ளினாா்.

இதில் பலத்த காயமடைந்த மைக்கேல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மைக்கேல் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்தனா். விசாரணையில், வெங்கடேசனுக்கும், பொன்மாலாவுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததும், அதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அப்போது, மைக்கேல் 2-ஆவது தளத்தில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com