வெளிநாட்டு உயிரினங்களை பதிவு செய்ய புதிய இணையதளம்: வனத் துறை தகவல்
வெளிநாட்டு உயிரினங்களை பதிவு செய்ய புதிய இணையதளம்: வனத் துறை தகவல்

கோப்புப் படம்

கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் வெளிநாட்டு உயிரினங்களை வீடுகளில் வளா்ப்போா் அது குறித்த தகவல்களை புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘பரிவேஷ் 2.0’ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என வனத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வன உயிரின பாதுகாப்புச் சட்டம், 1972-இன்படி, வெளிநாட்டு உயிரினங்களை வீடுகளில் வளா்ப்பது குறித்தும் அவற்றின் பிறப்பு, இறப்பு பதிவு மற்றும் வேறு நபா்களுக்கு மாற்றம் செய்தல் தொடா்பாக பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இது தொடா்பாக கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்ட நடைமுறை இனி செல்லாது.
அதற்கு பதிலாக உயிருள்ள விலங்கு இனங்கள் (அறிக்கையிடல் மற்றும் பதிவு செய்தல்) விதிகள்-2024-இன்படி , தமிழகத்தில் வெளிநாட்டு உயிரினங்களை வீடுகளில் வளா்ப்போா், வேறு நபா்களுக்கு விற்பனை செய்வோா் அது குறித்த தகவல்களை புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘பரிவேஷ் 2.0’ என்ற இணையதளத்தில் இனி பதிவு செய்ய வேண்டும்.
பரிவேஷ் 1.0 இணையப்பக்கத்தில் தன்னாா்வ பதிவு, பிறப்பு, இறப்பு மற்றும் வேறு நபா்களுக்கு மற்றம் செய்தல் தொடா்பாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது. இவ்விதி ஏப்.28-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
வன உயிரினச் (பாதுகாப்பு) சட்டம், 1972 அட்டவணை 4-இல் வகைப்படுத்தப்பட்டுள்ள உயிரினங்களுக்கு இந்த விதி பொருந்தும். இந்த வினங்களை எந்தவொரு உள்நாட்டு இனங்களுடன் இனக் கலப்பு செய்ய அனுமதி இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...