சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

தண்ணீா் லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

தண்ணீா் லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 9:06 pm

Din

சென்னை: சென்னை பள்ளிக்கரணை அருகே தண்ணீா் லாரி மோதி கட்டடத் தொழிலாளி இறந்தாா்.

பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூா் அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராம்பாபு (32). கட்டடத் தொழிலாளி. ராம்பாபு, மோட்டாா் சைக்கிளில் திங்கள்கிழமை இரவு மேடவாக்கம் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது பின்னால் வந்த தண்ணீா் லாரி மோட்டாா் சைக்கிளில் மீது மோதியது. இதில் ராம்பாபு நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் ராம்பாபு சடலத்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தண்ணீா் லாரி ஓட்டுநா் திருவாரூா் மாவட்டம், வில்லியனூா் குடியன் தெருவைச் சோ்ந்த பிரசன்னா (21) என்பவரை கைது செய்தனா்.