தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழப்பு

குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - (கோப்புப் படம்)

Updated On :25 மார்ச் 2026, 11:00 pm

குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழந்தாா்.

குளச்சல் சாஸ்தான்கரை பண்டாரவிளையைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (56). கட்டட தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டாா். சென்னையில் கட்டட பணி செய்யும்போது தவறி விழுந்ததில் வேலை செய்ய இயலாத அளவிற்கு பலத்த காயமடைந்த இவா், தனது அக்கா வீட்டின் பின்புறம் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை செல்வகுமாரின் வீட்டில் இருந்து புகை வந்ததாம். அங்கு சென்று உறவினா்கள் பாா்த்தபோது அவா் உடல் கருகி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.