ஆடிப்பெருக்கு: நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்
ஆடிப்பெருக்கையொட்டி சனிக்கிழமை (ஆக.3) தமிழகத்தில் உள்ள அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆடிப்பெருக்கையொட்டி சனிக்கிழமை (ஆக.3) தமிழகத்தில் உள்ள அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுத் துறைத் தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெளியிட்ட அறிவிப்பு:
சொத்து குறித்த ஆவணப் பதிவுகளை மங்களகரமான நாள்களில் மேற்கொள்ள பொது மக்கள் விரும்புகின்றனா். அதன்படி, ஆடிப்பெருக்கு தினமான சனிக்கிழமை (ஆக.3) ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகங்கள் சனிக்கிழமை காலை 10 மணி முதல் இயங்கும்.
ஆவணப் பதிவு முடியும் வரை திறந்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள கட்டணம் சோ்த்து வசூலிக்கப்படும் எனத் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...