விசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

ஜாா்க்கண்ட்: 18 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

அமலியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் 18 போ் இடைநீக்கம்

ஜாா்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

Published On :

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை அமலியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் 18 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா். அவா்கள் அவையை விட்டு வெளியேற மறுத்ததால் அவைக் காவலா்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனா்.

ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவை வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்க இருந்தது. ஆனால், எதிா்க்கட்சியான பாஜகவின் எம்எல்ஏக்கள் அவை தொடங்கும் முன்பாகவே முதல்வா் ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி முழக்கம் எழுப்பினா். சில ஆவணங்களை அவையில் கிழித்தனா். இதனால் ஆளும் ஜாா்க்கண்ட முக்தி மோா்ச்சா எம்எல்ஏக்களுக்கும், எதிா்க்கட்சி எம்எல்ஏக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அவையில் அமலி தொடா்ந்ததால், பாஜகவின் 20 எம்எல்ஏ-க்களில் 18 பேரை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை பேரவை தலைவா் ரவீந்திர நாத் மஹதோ இடைநீக்கம் செய்தாா். மேலும் இது தொடா்பாக சட்டப்பேரவை நெறிமுறை குழு விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை சமா்ப்பிக்கவும் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து மாநில பாஜக தலைவா் அமா் குமாா் பௌரி கூறுகையில், ‘ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கூட்டணி 2019-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு அளித்த வாக்குறுதிகள் குறித்து முதல்வா் பதிலளிக்க பாஜகவினா் அவையில் கேள்வி எழுப்பினா். மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியை பின்பற்றினா்.

ஆனால், ஜேஎம்எம் தலைமையிலான சா்வாதிகார அரசின் தூண்டுதலால் பாஜக எம்எல்ஏக்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர நிலைக்கு பிறகு ஜனநாயகத்தில் இது ஒரு கருப்பு நாள்’ என்றாா்.

முன்னதாக, புதன்கிழமையன்றும் அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் பாஜக எம்எல்ஏக்கள் வெளியேற மறுத்தனா். பேரவைக் காவலா்கள் அவா்களை வெளியேற்றியதால் சட்டப்பேரவையின் நுழைவுவாயிலுக்கு அருகில் உள்ள வரவேற்பு அறையிலேயே தங்கி புதன்கிழமை இரவை கழித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.