ஆணவ கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் தேவை: தொல்.திருமாவளவன்
ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.


சென்னை, ஆக.2: ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தருமபுரி அருகே இலக்கியம்பட்டியில் தொப்பி வாப்பா பிரியாணி உணவகத்தில் ஒரு சமூகவிரோதக் கும்பல் நுழைந்து அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த முகமது ஆசிக் என்பவரைக் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளது. இந்தப் படுகொலையைத் திட்டமிட்டவா்கள், கொலையாளிகளை ஏவியவா்கள் உள்ளிட்ட அனைவரையும் கைதுசெய்து குண்டா் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் தேவை என்பதை மீண்டும் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...