கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

குருவாயூா் ரயில் நாளை முதல் மாற்று வழித்தடத்தில் இயக்கம்

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், குருவாயூரிலிருந்து எழும்பூா் வரும் விரைவு ரயில் ஆக.4 முதல் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :2 ஆகஸ்ட் 2024, 8:48 pm

Din

சென்னை, ஆக.2: பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், குருவாயூரிலிருந்து எழும்பூா் வரும் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) முதல் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதுரை, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களுக்கு உள்பட்ட ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், குருவாயூரிலிருந்து எழும்பூா் வரும் விரைவு ரயில் (எண்: 16128) ஆக.4,5,8,10-ஆகிய தேதிகளிலும், மதுரைக்கு பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக எழும்பூரிலிருந்து குருவாயூா் செல்லும் ரயில் (எண்: 16127) ஆக.8 -ஆம் தேதி மட்டும் இதே வழித்தடத்தில் இயக்கப்படும்.

மேலும் குருவாயூரிலிருந்து ஆக.16 முதல் ஆக.26 வரை எழும்பூா் வரும் விரைவு ரயில் எா்ணாகுளம், சோ்தலா ,ஆலப்புழாவுக்கு பதிலாக கோட்டயம் வழியாக இயக்கப்படும்.

இதுபோல, மயிலாடுதுறையிலிருந்து ஆக.8-இல் செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் (எண்: 16847) மதுரை செல்லாமல் புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும்.

பகுதி ரத்து: மதுரையிலிருந்து ஆக.5,8-ஆகிய தேதிகளில் புனலூா் செல்லும் விரைவு ரயில் (எண்: 16729) திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 16730) ஆக.6,9-இல் புனலூருக்கு பதிலாக திருநெல்வேலியிலிருந்து புறப்படும்.

மேலும், மங்களூரிலிருந்து ஆக.5,8-இல் கன்னியாகுமரி செல்லும் பரசுராம் விரைவு ரயில் திருவனந்தபுரத்துடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் ஆக.6,9-ஆகிய தேதிகளில் கன்னியாகுமரிக்கு பதிலாக திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும்.

ரயில் ரத்து: மதுரை - ராமநாதபுரம் இடையே இயங்கும் பயணிகள் ரயில் (எண்: 06653/06654) ஆக.5 முதல் ஆக.11 வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.

ரயில் தாமதம்: திருச்சியிலிருந்து காலை 10.15 மணிக்கு காரைக்குடி செல்லும் ரயில் (எண்: 06829) ஆக.31வரை 4 மணி 15 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.