நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்: இபிஎஸ்

News image

எடப்பாடி கே. பழனிசாமி.(கோப்புப்படம்)

Updated On :8 ஆகஸ்ட் 2024, 10:37 pm

Din

சென்னை, ஆக. 8: வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருக்கிறது என்றும், அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் சமூகவலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

வக்ஃப் வாரிய சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தை மறுக்கும் வகையில் உள்ளது.

முஸ்லிம்களின் நலனுக்காக முஸ்லிம்களால் அா்ப்பணிக்கப்பட்ட சொத்துகளை அவா்களிடமிருந்து பறித்து அரசு நிா்வகிக்க நினைப்பது தவறானது. வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவா்களையும் அதை நிா்வகிக்க ஒப்புதல் அளிக்கும் திருத்தம் ஏற்புடையதல்ல.

எனவே, மதச்சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்கும் இந்த சட்டத் திருத்தத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப்பெருந்தகையும் வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

பாஜக வரவேற்பு: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழக பாஜக வரவேற்கிறது. காங்கிரஸ் - திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது அமைக்கப்பட்ட சச்சாா் குழுவின் அறிக்கையை இந்தச் திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.